மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி, 5 பேர் காயம்.

திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி வாகனம் வெண்ணாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து நிலை தடுமாறி தலைகுப்புற வெண்ணாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு வாகனத்தின் மீது அமர்ந்து வந்த கார்த்திக் என்பவர் கவிழ்ந்த வண்டியில் கீழ் பகுதியில் சிக்கி பலியானார். ஈச்சர் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து இருப்பதால் ஜேசிபி எந்திதம் உதவியுடன் விபத்துக்கு உள்ளான வாகனம் தூக்கப்பட்டு அடியில் சிக்கி இருந்த கார்த்திக் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.


மேலும் சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் மொய்தீன் கான், அசோகன், கருப்பசாமி, நிசாய் அகமது, சக்தி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
