மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்திக் கருவி இன்று செயல்பாட்டுக்கு வந்தது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக நாகர்கோவில் வந்துள்ளார். அதில் ஒரு அங்கமாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கருவியை, அமைச்சர் மனோதங்கராஜுடன் இணைந்து திறந்துவைத்தார். தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் 1.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடக்கிறது. அந்த வகையில் சுகாதாரத் துறையில் இன்று மட்டும் குமரிக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
