மாவட்ட செய்திகள்
போடியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உடைக்கப்பட்ட ஜமீன்தார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்.
போடி நாயக்கனூர் சுமார் 120 ஆண்டுகளாக ஜமீன்தார்கள் ஆளப்பட்ட பாரம்பரியமான ஊராகும். இதில் ராசி நாயக்கர் மிகவும் புகழ்பெற்ற ஜமீன்தாராகவும் நீதிமானாகவும் கருதப்பட்டு வருபவர். இன்றும் அந்த ஊர் மக்கள் அவரை கடவுளாக நம்பி வழிபட்டு வருகின்றனர். கண்ணில்லாத பெண்ணுக்கு கண் கொடுத்த ராசி நாயக்கர் என்றும் இவரை போற்றி வழிபடுவது உண்டு.போடியில் உள்ள பல வழிபாட்டுத் தலங்கள் இவரால் நிர்மாணிக்கப்பட்டது ஆகும். ஒரே கல்லால் ஆன தூணில் செதுக்க பட்ட அவரது திருவுருவச் சிலை போடி முக்கிய நுழைவு பகுதியான பார்க் நிறுத்தம் அருகே சிறிய கோயிலாக நிறுவப்பட்டு வழிபடப்பட்டு மக்கள் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் கார்த்திக் (35) என்பவர் அதிகாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆக்ரோசமாக கற்களை தூக்கி கொண்டு ராசி நாயக்கர் சிலை உள்ள இடத்திற்குள் நுழைந்து அங்கு உள்ள நந்தி வாகனம், எலி வாகனம், சூலாயுதம் போன்றவற்றை சேதப்படுத்தியதுடன் ராசி நாயக்கருடைய சிலையில் உள்ள முகத்தையும் கைகளையும் சேதப்படுத்தி அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளார்.
இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இரண்டு நாட்களாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி போடி கரட்டுப்பட்டி சூலபுரம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் ராஜ கம்பளத்தார் நாயக்கர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலையை உடைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பார்க் நிறுத்தம் அருகேசாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேனி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது ந.டவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.