மாவட்ட செய்திகள்
திருச்சி திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற விழா.

திருச்சி மாவட்டம், திருவெள்ளறையில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் உப கோவிலான
ஸ்ரீபுண்டரீக பெருமாள் கோயில். இக்கோயிலில் பங்குனி தேரோட்ட திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி தேரோட்டம் விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு தேரோட்ட கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது.


முன்னதாக. அதிகாலையில் பெருமாள் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆனந்தராயர் மண்டபம் சென்றடைந்தது. பின்னர் கொடி படம் திருவீதி உலா வந்து ஆதாரனைகள் நடைபெற்று கொடியேற்ற விழா நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஆனந்தராயர் மண்டபம் சென்றடையும்.

தொடர்ந்து பல்லக்கு புறப்பாடு, கருடசேவை, யானை வாகனம், குதிரை வாகனம், பூந்தேர் உள்ளிட்ட திருவீதிஉலா நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வருகின்ற மார்ச் 28ந் தேதி நடைபெற உள்ளது விழாவில் பட்டயதாரர்கள், ஊராட்சி மன்ற தலைவர் லதாகதிர்வேல், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
