BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சை விளார் சாலையில் அமைந்துள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி தலைவர் மரிய பிலோமி தலைமை தாங்கினார் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி மரியம்மாள் வரவேற்புரை நல்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி கேத்தலினா கல்லூரியின் சாதனைகளையும் சிறப்புகளையும் ஆண்டறிக்கை வாசித்தார் கல்லூரியில் தலைமை அண்ணை மரிய பிலோமி தலைமை உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆயர் சபை சட்டத்துறை செயலரும் மூத்த வழக்கறிஞருமான முனைவர் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ் வருகை புரிந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில் தஞ்சையையும் தமிழையும் பிரிக்க முடியாது நடந்தாய் வாழி காவேரி என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார் காவிரி பாயும் தஞ்சையில் பெண்கல்வியை போற்றுவதில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி சாதனை படைத்து வருகிறது பட்டம் பெறும் நீங்கள் கல்வியை கண் என கருதி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார் விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 122 மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன இதில் இளங்கலை உயிர் தொழில்நுட்பவியல் மாணவி நிவேதிதா இளங்கலை மருத்துவ நிர்வாகவியல் மாணவி ஷாகிதா பானு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர் 10 மாணவிகள் இரண்டாம் இடத்தையும் 9 மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தனர் பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள் துணை முதல்வர் தலைவர்கள் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )