மாவட்ட செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கலைஞர் நகர் கிளை கழகம், இளைஞர் அணி சார்பில் மின்னொளி கபடி போட்டி.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை கிழக்கு ஒன்றியம் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் திமுக கிளை கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் கடந்த இரண்டு நாட்களாக மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது.

தஞ்சையை ரகுமான் நகர் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். விளையாட்டுப் போட்டியை தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார். கலைஞர் நகர் கிளைக் கழக செயலாளர் முருகன் வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருவையாறு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், தஞ்சை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளருமான துரை.சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். முதல் பரிசு ரூ.30 ஆயிரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் பாஸ்கரன், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் கோவிந்தராஜ், ராஜா, முத்துகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம் செல்வகுமார், ரதி உஷா செந்தில் ஆகியோர் வழங்கினார். சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு ரூ.10 மற்றும் ரூ. 5 ஆயிரம் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கலைஞர் நகர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
