BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வார இறுதி நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு.

வார இறுதி நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு இதமான காலநிலை மற்றும் மலைசார்ந்த காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு போக்குவரத்து பாதிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றன இந்நிலையில் வார இறுதி நாளான இன்று விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

காலை முதலே அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது அதேபோல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதமான கால சூழ்நிலை சாரல் மழை பெய்து வருகிறது சுற்றுலாப் பயணிகள் குதுகலத்துடன் சுற்றுலாத் தலங்களான பசுமை பள்ளத்தாக்கு.வெள்ளி நீர்வீழ்ச்சி நட்சத்திர வடிவிலான ஏரி. கோக்கர்ஸ் வாக். ரோஜா பூங்கா. பைன் பாரஸ்ட் மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது .

மேலும் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது போதிய காவல்துறை அதிகாரிகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

ஆகவே மாவட்ட நிர்வாகம் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அதிகளவு பாதுகாப்பிற்கு காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )