மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை சேர்ந்தவர் குணசேகரன் பிஜேபி பிரமுகர் இவரது மனைவி மகாராணி குணசேகரன் மீது தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை சேர்ந்தவர் குணசேகரன் பிஜேபி பிரமுகர் இவரது மனைவி மகாராணி குணசேகரன் மீது தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவரது மகளுக்கு 15 வயது இந்த சிறுமிக்கு அவரது உறவினர் மகனுடன் காசவளநாடு புதூர் பல்லாங்குழி அய்யனார் கோவிலில் கடந்த 16ஆம் தேதி திருமணம் நடந்தது உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமி சைல்ட் லைன் அமைப்பிற்கு கால் செய்து தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார் இதை அடுத்து சைல்ட் லைன் அமைப்பினர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் அப்போது சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மை என தெரிய வந்தது இதை அடுத்து சைல்ட் லைன் அமைப்பினர் சிறுமியை மீட்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்கு அந்த சிறுமியின் தந்தை குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இதை தொடர்ந்து சைல்ட் லைன் அமைப்பினர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததை அடுத்து வல்லம் டிஎஸ்பி பிருந்தா மற்றும் தமிழ் பல்கலைக்கழக உதவி ஆய்வாளர் அபிராமி மற்றும் காவல்துறையினர் நேரடியாக நாஞ்சிக்கோட்டை சென்று சிறுமியை மீட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் சிறுமியின் தந்தை குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தாய் மகாராணி இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.