மாவட்ட செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு முகாம்.
உடுமலை மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
குரல்குட்டை ஊராட்சி மன்ற தலைவி ஆனந்த வேணி பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், பணிநிறைவு தலைமையாசிரியர் சிவராஜ், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கருணாநிதி, கராத்தே செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு பார்வையாளர்களாக உடுமலை கல்வி வட்ட பள்ளி துணை ஆய்வாளர் கலைமணி மற்றும் திருப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகள் மற்றும் பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.