மாவட்ட செய்திகள்
இஸ்லாமிய அமைப்பு சார்பில் கர்நாடக வங்கி முற்றுகை போராட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஹிஜாப் அகற்றிவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து திருச்சி சாஸ்திரி ரோட்டில் உள்ள கர்நாடக வங்கிகளுக்கு பூட்டு போடும் முற்றுகை போராட்டம்.

மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ்அஹமது மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி மற்றும் இந்நிகழ்வில் மாவட்ட துணை, அணி, பகுதி நிர்வாகிகள் உட்பட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ப்ரீத்தி மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப் போராட்டத்தை ஒட்டி அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பினை ஈடுபட்டனர் மேலும் கர்நாடக வங்கி அலுவலகம் மூடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
