BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தீ விபத்து – மாடுகள் உயிர் தப்பியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவு தாமரைப்பாடி பிரிவு அருகே உள்ள ஒரு மாட்டுக் கொட்ட கையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மள மளவென பிடித்தது. தகவல் கிடைத்ததும் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது மாடுகள் அனைத்தும் உயிர் தப்பின. பீடி குடித்த ஒரு நபர் தீயை அணைக்காமல் அங்கே போட்டதுதான் இந்த தீ விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )