BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் சாமளாபுரம் அருந்ததியின மக்கள் இட பிரச்சனையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் !!

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் அருந்ததியினர் காலனியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியாக உள்ளது என்றும் இந்த பகுதியில் உள்ள அருந்ததியின மக்கள் 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை கண்டித்து சாமளாபுரம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


இந்நிலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறையாக வசித்துவரும் மக்களுக்கு குடியிருப்பு பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்கவேண்டும் எனவும், இப்பிரச்சனையில் இதுவரை நடவடிக்கை எடுக்காமளும் , பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத மாவட்ட ஆடசியரை கண்டிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )