BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கு கோடிக்கணக்கில் வாடகை பாக்கி.

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கு கோடிக்கணக்கில் வாடகை பாக்கி – கடை கடையாக ஏறி ஒரே நாளில் அதிரடியாக
70 லட்சம் வசூல் செய்த அறநிலையத்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் அறநிலையத்துறைக்கு சேகர்பாபு அமைச்சராக நியமிக்கப்பட்டார் அவர் பதவி ஏற்றது முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நிலுவையிலுள்ள வாடகையை வசூல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான கடைகள் மலைக்கோட்டை வாசல் பகுதி, என்எஸ்சி போஸ் ரோடு, நந்தி கோவில் தெரு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 48 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த கடைகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு முதலே வாடகை பாக்கி இருந்து வருகிறது. இவ்வாறு கோயிலுக்கு வர வேண்டிய வாடகை பாக்கி தொகை 5.57 கோடியாக இருக்கிறது.

பல தொலைக்காட்சிகளில் பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தொழில் செய்யும்
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் ஒரு கோடியே 37 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது, இதேபோல் நாகேந்திரன் என்ற நிறுவனம் சுமார் ஒரு கோடியே 4 லட்சம் என்று பல நிறுவனங்கள் சுமார் 50 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளனர்.


இது குறித்து கடைகாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், வாடகை செலுத்ததாததால் வாடகை பாக்கி குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் மலைக்கோட்டை கோயில் நிர்வாகம் திடீர் என வாடகை வசூலில் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக ஏறி அவர்களிடம் ஒரே நாளில் மட்டும் 70 லட்சம் ரூபாய் வசூலித்தனர்.
இனி வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )