மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே அழிந்து வரும் வன உயிரினங்களையும் பாதுகாக்க மரகன்றுகள் நடும் விழா.

அழிந்து வரும் வன உயிரினங்களையும் பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கிருஷ்ணகிரி அருகே சமுக காடுகள் மற்றும் விரிவாக்க
கோட்டத்தின் சார்வில் வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரகன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட சமுக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது, கோட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு வனச்சரக அலுவலர்கள் குமார், சத்திவேல், வீரமணி, சோமகர், மனோகரன், முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த உலக வன நாள் விழாவினைத் தொடர்ந்து
உலகம் முழுவதும் நவீனமயமாக்கலின் விளைவாக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதினால் வனப்பகுதிகள் குறைந்து
வருவது மட்டுமல்லாமல்
வனப் பகுத்திக்குள் வசித்து வந்த உயிரினங்களும் அழிந்துவருகிறது.

இதனால்
வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது,
ஆகவே வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு ,வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த மரக்கன்றுகள் நடும்பணிகளை
கிருஷ்ணகிரி கோட்ட வன அலுவலர் மகேந்திரன்
பைனப்பள்ளி உள்ளிட்ட வனசார்ந்த பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்பணிகளை துவக்கிவைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுதினார்
இதில் புளி, வேம்பு, பாதாம், புங்கன், பூவரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரச்செடிகள் நடப்பட்டது.
வனங்களை பாதுகாக்கும் வகையில் நடைப்பெற்ற இந்த விழாவில் வனத்துறையினர் பலர் கலந்துக்
கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
