மாவட்ட செய்திகள்
உடுமலை நகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவர் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அவலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அண்ணா சிறுவர் பூங்கா, பல ஆண்டுகளாகவே பயன்பாடில்லாமல் பூட்டியே கிடப்பதால், ‘குடிமகன்களின்’ பாராக மாறி வருகிறது.

உடுமலை பார்க் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, அண்ணா சிறுவர் பூங்கா உள்ளது. பழமையான இந்த பூங்காவை பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால், புதர் மண்டி பாழடைந்த நிலையில் உள்ளது மேலும் பூங்காவில், உள்ள விளையாட்டு தளவாடங்கள் துருப்பிடித்தும், ஆபத்தான நிலையிலும் பயன்படுத்த நிலையிலும் உள்ளது.

இதுகுறித்து உடுமலை பொதுமக்கள் கூறியதாவது உடுமலையில் பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் பூங்கா பூட்டிய நிலையில் உள்ளது. இதற்கிடையில் அருகில், ‘டாஸ்மாக்’ கடையில் பலரும் மது வாங்கி மது அருந்தும் இடமாக தற்போது மாறிஉள்ளது மேலும் விடுமுறை நாட்களில், பூங்காவின் அருகில் குடிமகன்கள், நிலையில்லாமல் அரைகுறையான ஆடையுடன் படுத்துக்கிடப்பதும், பொதுமக்களை பெரிதும் முகம் சுழிக்க வைக்கிறது. மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.


மேலும் இரவு நேரங்களில் கஞ்சா உட்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடமாகவும் மாறி உள்ளது ஆகையால் பழமையான பூங்காவை, தூய்மை படுத்தி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதோடு, பாதுகாவலர் நியமிக்கவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
