மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற 2வது வார்டு உறுப்பினர் பால்பாண்டி அவரது சொந்த செலவில் சாலையை சீர் செய்யும் பணி.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பால்பாண்டி. இவரின் வார்டு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் செல்லும் சாலை குண்டும் குழியுமான நிலையில் ஜல்லிக் கற்களைப் போட்டு நிரப்பி இருந்ததால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் அதை கவனித்த பெரியகுளம் நகர்மன்றத் 2வது வார்டு உறுப்பினர் பால்பாண்டி அவரது சொந்த செலவில் கிராவல் செம்மண்ணை கொண்டுவந்து ஜல்லிக் கற்களை மேல் போட்டு பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நகர்மன்ற உறுப்பினர்யின் செயலை பாராட்டினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
