மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கொள்ளையன் மணப்பாறை கிளைச் சிறையில் வலிப்பு நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி சாவு.

திருச்சி அருகே கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கொள்ளையன் மணப்பாறை கிளைச் சிறையில் வலிப்பு நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி சாவு.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா சத்திரம் குடித்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் கடந்த 18ஆம் தேதி பக்காஸ் எனப்படும் கரும்பு சக்கையை லாரியில் ஏற்றிக்கொண்டு புகளூர் சென்றுநோக்கி கொண்டிருந்தார்.

அப்போது தொட்டியம் தாலுகா ஆபிஸ் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் லாரியை வழிமறித்து பெருமாள் கழுத்தில் கத்தியை வைத்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ 2ஆயிரத்தை வழிபறி செய்துள்ளனர்.

இது குறித்து பெருமாள் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தொட்டியம் காவல்துறையினர் தாலுகா அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த 3நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் கத்தியைக் காட்டி லாரி டிரைவரிடம் ரூபாய் 2ஆயிரம் வழிபறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

நேரம் விசாரணையில் அவர்கள் தொட்டியம் பகுதியை சேர்ந்த தினேஷ் மணிகண்டன், பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து தொட்டியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். துறையூர் குற்றவியல் நடுவர் மணப்பாறை கிளை சிறையில் மூன்று பேரையும் அடைக்க உத்தரவிட்டார்.
19ம்தேதி இரவு மணப்பாறை கிளை சிறையில் தினேஷுக்கு வலிப்பு நோய் ஏற்படவே அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 20ஆம் தேதி மாலை இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவம் குறித்து தொட்டியம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
