மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி உத்தனப்பள்ளியில் விளைநிலத்தில் சிப்காட் அமைப்பதை கண்டித்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் விளைநிலத்தில் சிப்காட் அமைப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிப்காட் நிலம் எடுப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதியில் 5.வது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. சுமார் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வருவாய் அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலங்களில் தென்னை மரங்கள், மா மரங்கள், பழவகை மரங்கள், கோழிப்பண்ணைகள், மற்றும் பசுமை குடில்கள் அமைந்துள்ளது.
விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிப்காட் நிலம் எடுப்பாள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கும் வகையில் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் என வழியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசின் போக்கினை கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
