மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் வளையபட்டி ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சியில் கோவிந்தாபுரம், வளையப்பட்டி, குருவிக்காரன் வலசு, குட்டம் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே கருமலை ஓடையின் குறுக்கே ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் செலவில் இரண்டு தடுப்பணையில் கட்டப்பட்டு உள்ளது. இதில் வங்க நரிமேடு பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் நீர் எடுத்துச் செல்வதற்கும் , மயான ஊர்வலம் சென்று இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதற்காக அவ்வூரில் தடுப்பு சுவர்கள் கட்டுவதற்காக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.