மாவட்ட செய்திகள்
தற்போது சிறையில் உள்ள பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை,கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் கோட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய குற்றவாளியான மதுரமங்கலத்தை சேர்ந்த குணா (எ) படப்பை குணா தொடர் குற்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் இகாப அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இஆப அவர்கள் குணா மீது குண்டர் தடுப்பு காவலில் வைக்க கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உத்தரவிட்டு நீதிமன்ற காவலில் இருந்து வரும் நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அவர்களிடம் அளித்திருந்த நன்னடத்தை உறுதிமொழி ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சென்னை தடுப்பு காவல் ஆணையின் அறிவுரையின் பேரில் 340 நாட்கள் சிறை வழங்கப்பட்டுள்ளது.
குணா என்னும் படப்பை குணா மீது கொலை கொலைமுயற்சி கொள்ளை அடிதடி கட்டப்பஞ்சாயத்து என 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.