மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் முருங்கைக்காயின் வரத்து அதிகமாக வரத் துவங்கியதால் விலை வீழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிகமாக செடிமுருங்கை கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக கப்பலபட்டி, தாராபுரம் பகுதியில் அதிகமாக விளைகிறது. எனினும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் பெய்த மழையால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் முருங்கைக்காயின் குறைந்தது.இதனால் நாசிக் பகுதியில் விளைந்த முருங்கைக்காய்கள் கொண்டு வரபட்டு கிலோ ரூபாய் 200க்கு மேல் விற்றக்கப்பட்டது. இதில் கடந்த சில நாட்களாக உள்ளூர் பகுதியில் இருந்து வரத்து அதிகமாக வரத் துவங்கியதால் விலை படிப்படியாக குறைந்து இன்று கிலோ ரூபாய் 35க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் இன்னும் வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
