மாவட்ட செய்திகள்
58 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு.

கடந்த பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் செங்குன்றம் ஆயிஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட ஐம்பெரும் சங்கங்கள் ஆயிஷா மெட்ரிக் பள்ளி வளாகம், கன்னி செட்டியார் மண்டபத்தில் சங்கரா நேத்ரலயாவுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. இம்முகாம்களில் கலந்து கொண்ட 177 பேரில் 58 பேருக்கு மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கும் நிகழ்வு செங்குன்றம் ஆயிஷா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மஸ்ஜிதே ஆயிஷாவின் தலைமை இமாம் மௌலவி ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி தலைமையில் நடைபெற்றது.
மஸ்ஜிதே ஆயிஷா பொருளாளர் எஸ்.ஏ. அஹ்மத், கமிட்டி உறுப்பினர் டி.அக்பர் பாஷா, ஆயிஷா மெட்ரிக் பள்ளி கமிட்டி உறுப்பினர் என்.முகம்மது யாசீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் தலைவரும் ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியருமான நண்பன் எம்.அபுபக்கர் வரவேற்புரையாற்றினார்.
செங்குன்றம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், நாரவாரிக்குப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், வார்டு கவுன்சிலர்கள் என்.எம்.டி. இளங்கோவன், கே.கே.ராமன், வினோதினி பாலாஜி, திமுக பேரூர் கழக அவைத் தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், என்.அப்துல்சமது, சென்னை சோசியல் லயன்ஸ் சங்கப் பொருளாளர் ஏ.கே. முகம்மது யூசுப், இணைச் செயலாளர் ஷாநவாஸ், ஹேமந்த், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இலவச மூக்கு கண்ணாடியை பயனாளிகளுக்கு வழங்கினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
