மாவட்ட செய்திகள்
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு மதிய உணவு.

சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு மதிய உணவு
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கம் இணைந்து மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை செங்குன்றம் அடுத்த புழல் கேம்ப் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் புழல் வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு Unique ID Card வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திட்டஅலுவலர் தலைமையில் நடத்தியது.

இந்நிகழ்வில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்குக்கு சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் லயன்ஸ் சங்க முதல் துணை ஆளுநர் B.V.இரவீந்திரன், முன்னாள் ஆளுநர் D.துளசிங்கம், GLT A.T.இரவிசந்திரன், மண்டலத் தலைவர் C.ராஜேஷ், வட்டாரத் தலைவர் B.கோதண்டபாணி, தலைவர் N.சந்திரசேகர், செயலாளர் K.இமானுவேல்ராஜ், பொருளாளர் கண்ணன், உடனடி முன்னாள் தலைவர் M.பொன்னையன், சங்க இயக்குனர்கள் இரா. ஏ.பாபு, D.கோபி, R.முனுசாமி, முன்னாள் தலைவர்கள் G. சீனிவாசன், S.பாலாஜி, A. லோகநாதன், M.சேகர், T.பவானிசங்கர், S.குமார், J. பாலகுமார், R.ராஜேஷ்கண்ணா, G.பலவேசமூர்த்தி, C.இராஜன், R.சுந்தர் ராஜன், புள்ளிலைன் லயன்ஸ் சங்க பொருளாளர் மந்திரமூர்த்தி, லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலானோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் P.P.சுகுமார் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து, வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட் வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
