BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பை நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரியில் உள்ள கிராம ஏரி சுமார் 369 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்

இந்த ஏரிக்கு உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் பல ஆதாரம் இருக்கிறது இதன் மூலம் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவராயநேரி கிராம ஏரியை புதுக்குடி, திருவிழா பட்டி, தேவராயநேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 80 க்கும் மேற்பட்டோர் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் தேவராயநேரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த மக்களுக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் திமுக ஆட்சி காலத்தில் குடியிருக்க பட்டா போட்டு வழங்க பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவராயநேரியை சேர்ந்த கருப்பசாமி உடையார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021 ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.

அதன் அடிப்படையில் ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என உயர்நீதிமன்றம் சட்டம் இயற்றி உள்ளதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மதுரை உயர் நீதிமன்றம் அண்மையில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கருப்பசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுத்துள்ளார். அதன் விசாரணை வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஆற்று பாதுகாப்புக் கோட்ட நீர்வள பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் சார்பில் 9 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

தற்போது முதற்கட்டமாக 6 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணி காலை தொடங்கியது.

இதில் நீர்வள பாதுகாப்பு துறை செயற்பொறியாளர் மணி மோகன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், பொறியாளர் ராஜரத்தினம், திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நடைபெற்றது.

வருவாய்த்துறையினர் நீர்வள பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், வெற்றிவேல், சந்திரமோகன் உட்பட சுமார் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )