மாவட்ட செய்திகள்
சென்னையில் மாற்றுதிறனாளி உதவித்தொகை உயர்வுக்காக போராட வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குண்டுகட்டாக கைது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய்3000மாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5,000 மாகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை கோட்டையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும்
போராட்டத்தில் ஈடுபடவந்த அனைவரையும் ரயிலை விட்டு இறங்க விடாமல் சென்னை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.மேலும்
காவல் துறையின் இந்த அராஜக போக்கை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் போராட்டம் நடத்தப்போவதாக மாவட்ட தலைவர் செல்வநாயகம், மாவட்ட செயலாளர் பகத்சிங் கூறியுள்ளார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
