மாவட்ட செய்திகள்
திருப்பூர் மைவாடி, வேடபட்டி, தாந்தோணி, மடத்துக்குளம், அமராவதி ஆறு, போன்ற பல்வேறு இடங்களில், நான்கு வழி சாலை பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மந்தமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மைவாடி, வேடபட்டி, தாந்தோணி, மடத்துக்குளம், அமராவதி ஆறு, போன்ற பல்வேறு இடங்களில், நான்கு வழி சாலை பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மந்தமாக நடைபெற்று வருகின்றன.


இதனால் இப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள், கடந்த இரண்டு வருட காலமாக, மாற்றுவழி பாதையைப் பயன்படுத்தி, மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல், அவ்வப்போது சாலை பணிகள் காரணமாக, வேறு வழியில் செல்லுமாறு பயணிகள் அவதியுற்று வரும் காரணத்தால், நான்கு வழி சாலை பணிகளை, மேலும் காலம் கடத்தாமல், விரைவில் முடிக்குமாறு கோரிக்கை வழுத்து வருகின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
