மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் , காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் மற்றும் கொழுமம் ஊராட்சி பகுதியில் இன்று வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில், சுகாதார ஆய்வாளர் நாராயணசாமி முன்னிலையில், காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.

இப்பகுதியில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ராஜா மற்றும் சங்கிலி துரை ஆகியோர் வழிகாட்டுதலின்படி, இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சென்று, காய்ச்சல், சளி, இருமல், ஆகிய தொந்தரவுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதிக அளவில் காய்ச்சல் உள்ள நபர்கள் அருகில் உள்ள குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
