BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பாளையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி ரவுண்ட் டேபிள் 54 மற்றும்  லேடிஸ் சர்க்கிள் 33 சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இரத்த சேமிப்பு மையம்.

பாளையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி ரவுண்ட் டேபிள் 54 மற்றும் திருச்சி லேடிஸ் சர்க்கிள் 33 சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இரத்த சேமிப்பு மையம் மற்றும் உயிர் மருத்துவ கழிவுகள் சேகரிப்பு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வேல்முருகன் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பணியாளர்களும், காதாளம்ப்பட்டி புரட்சிகர அம்பேத்கர் மக்கள் மன்ற உறுப்பினர்களும் இரத்த தானம் செய்தனர். தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திருமதி. பிருந்தா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் இரத்த சோகை கொண்ட கருவுற்ற தாய்மார் ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது.

இரத்த தானம் வழங்கிய அனைத்து தன்னார்வலர் களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கி திருச்சி ரவுண்ட் டேபிள் மற்றும் லேடிஸ் சர்க்கிள் அமைப்பினரின் சிறப்பான பணியை பாராட்டினார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராஜ் வரவேற்றார். திருச்சி ரவுண்ட் டேபிள் 54 தலைவர் திரு. கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். திருச்சி லேடிஸ் சர்க்கிள் 33 தலைவி திருமதி. யாமினி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு. அரங்கநாதன், மருத்துவர்கள் கருணாநிதி, வசந்தா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. ஆனந்தன், பொறியாளர். முத்துக்குமார், திருச்சி ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் திரு. கமல்தாஸ், முரளி கிருஷ்ணன், ராஜவேல், ஷ்யாம், அந்தோணி திருச்சி லேடிஸ் சர்க்கிள் உறுப்பினர்கள் திருமதி. தேம்பாவணி, ஆர்த்தி, பிரீத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )