மாவட்ட செய்திகள்
அகில பாரத சத்ரிய மகா சபா, பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் கொரோனா விழிப்பு உணர்வு, சாலை பாதுகாப்பு பிரச்சாரம்.

அகில பாரத சத்ரிய மகா சபா, பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் கொரோனா விழிப்பு உணர்வு, சாலை பாதுகாப்பு பிரச்சாரம்
அகில பாரத சத்ரிய மகா சபா மாநிலத் தலைவர் எம்.கே. குணா ஆலோசனையில் அகில பாரத சத்ரிய மகா சபா, பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு அரசு கிராமிய கலைப பண்பாட்டு மையம் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா விழிப்பு உணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரச்சாரம் காரனோடை பஜாரில் அகில பாரத சத்ரிய மகா சபா மாவட்டத் தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் எல்.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதரன், மாதவரம் தொகுதி தலைவர் எஸ்.வெங்கடேசன், செயலாளர் வெங்கடேசன், பொன்னேரி தொகுதி தலைவர் இ.ரமேஷ், செயலாளர் சாமிநாதன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், நிர்வாகி நாகராணி உள்ளிட்ட லயன்ஸ் உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்பு உணர்வை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கிராமிய கலை பண்பாட்டு மையம் சார்பில் கொரோனா விழிப்பு உணர்வு, சாலை விழிப்பு உணர்வு பாதுகாப்பு பிரச்சாரத்தை பொதுமக்களிடையே மேற்கொண்டதோடு, குறு நாடகத்தின் மூலமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
