மாவட்ட செய்திகள்
ஜாமீன் கேட்கும் அதிமுக நிர்வாகி: சிபிசிஐடி நோட்டீஸ்.

தேனி மாவட்டத்தில் மோசடி செய்து 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் பெயருக்கு பட்டா வழங்கியது தொடர்பான வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தாமரைக்குளத்தில் 60 ஏக்கர் 5 சென்ட், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் 2 சென்ட், வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் 43 சென்ட் என மொத்தம் 182.50 ஏக்கர் அரசு நிலம் 2017 முதல் 2021 செப்டம்பர் வரை வருவாய் அதிகாரிகள் உதவியுடன் அரசியல் பிரமுகர்கள், தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது.
CATEGORIES தேனி
