BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பால்குளம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பால்குளம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. எஸ் ஐ ஜெஸி மேனகா தொடங்கிவத்தார். அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் நிறைவு நாளான இன்று பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் மர்பி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கவின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன் கலந்து கொண்டார். பேரணியை அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸி மேனகா கொடியசைத்து தொடங்கி வைத்து பேசும் பொழுது இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலை பாதுகாப்பு பேரணியில் கலந்து கொள்ளும் நீங்கள் அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு சாலைகளில் பயணிக்க வேண்டும். ஹெல்மட் இல்லாமல் டூவீலரில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும். மேலும் 3 பேர் ஒரே பைக்கில் அமர்ந்து செல்வது விபத்துக்கு காரணமாகி விடுவதுடன் உங்கள் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. எனவே அதிக வேகம், பயங்கர சத்தம், ராங் சைடில் சேசிங் செய்வது எல்லாம் தவிர்க்கவேண்டும். சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் பெரும்பாலும் டீன்-ஏஜ் வயதினர் என்பது ஆய்வில் தெரியவருகிறது. எனவே சாலைகளில் செல்லும் பொழுது அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என அறிவுரை கூறினார். பேரணியில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகண்டு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டும், சாலைவிதிகளை மதிப்போம் உயிர்களைப் பாதுகாப்போம் என கோஷங்கள் எழுப்பினர். பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து துவங்கி வாரியூர், மேட்டுக்குடியிருப்பு, ஸ்ரீ லட்சுமிபுரம், அஞ்சுகிராமம் சந்திப்பு வழியாக அஞ்சுகிராமம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது. அங்கு அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜானகி இளங்கோ, துணைத் தலைவர் காந்திராஜன், கவுன்சிலர் வீடியோ குமார், ராஜேந்திரன் ஆகியோர் மாணவ மாணவிகளை வரவேற்று குளிர்பானங்கள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )