மாவட்ட செய்திகள்
தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மறந்த தமிழக அரசிற்கு நினைவூட்டும் விதமாக அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிர் நூதன முறையில் பாட்டுபாடி நினைவூட்டுப்பாடல்.

தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மறந்த தமிழக அரசிற்கு நினைவூட்டும் விதமாக அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிர் நூதன முறையில் பாட்டுபாடி நினைவூட்டுப்பாடல் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி தற்பொழுது CPU – எனப்படும் பங்களிப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது இதனால் அரசு ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும் எனவும் அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர் இதனைத் தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இன்றைய திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கண்டிப்பாக அமல்ப்படுத்தப்படும் என கூறியிருந்தனர்.

ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வரும் தமிழக அரசு 10-மாதங்களாகியும் அது பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்களின் மனக்குமுறலாய் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும் சமூக செயல்பாட்டாளருமான “ஆர்தர்” தமிழக முதல்வருக்கு தங்களின் முக்கிய கோரிக்கையை நினைவூட்டும் விதமாக கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் கருத்து பாடல் வரிகளை கோரிக்கை வரிகளாக மாற்றி தானே பாடி ஒட்டுமொத்த தமிழகரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடும் விதமாக வெளியிட்டுள்ளார் .

இந்தப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த பாடல் அரசு ஊழியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


பாடல் பாடியவர்: ஆர்தர்- அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அம்மையநாயக்கனூர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
