மாவட்ட செய்திகள்
உடுமலை பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதுடன் தேங்காய் மட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் பாதையை வழிமறித்தும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிகாரிகளை தடுத்தனர்.

உடுமலை அருகே உள்ள தளியை அடுத்த உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பள்ளபாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள செட்டியார் குளத்திலிருந்து செங்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து20 வீடுகள் மற்றும் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று பள்ளபாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதலில் வீடுகள் அகற்றப்பட்டது.

அதன் பின்பு கோயிலை அகற்றுவதற்கான முயற்சிகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதுடன் தேங்காய் மட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் பாதையை வழிமறித்தும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிகாரிகளை தடுத்தனர்.

இதனால் பள்ள பாளையம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.உடுமலை துணைபோலீஸ்சூப்பிரண்டு தேன்மொழி வேல் தலைமையில் 500 கற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
