மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த 50 கடைகள் இடித்து அகற்றப்பட்டது.

தமிழகத்தில் நீர்நிலை பகுதி மற்றும் நீர்வழி தடங்களை மறித்தும் ஆக்கிரமிப்பு செய்தும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழி தடங்களை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி, அரசு பள்ளி பாளையம் பகுதியில் நீர்வழி தடத்தை மறித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற களமிறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக 50 கடைகளை இடித்து அகற்றினர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறையாக வசித்துவரும் பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் கண்ணீர் வடித்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 100 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களின் கட்டிடங்களை இடித்து அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
