மாவட்ட செய்திகள்
எங்கே செல்கிறது இந்த சமூகம்.. ஓடும் பேருந்தில் பீர் குடித்து பள்ளி மாணவிகள் அட்டகாசம் !!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயன்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினமும் பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் பேருந்தில் பயணிக்கும் போதே, பேருந்துக்குள் மது அருந்தி அட்டகாசம் செய்தபடி சென்றுள்ளனர். அதாவது பேருந்தில் பயணித்த மாணவிகளில் ஒருவர், தனது புத்தக பைக்குள் இருந்து பீர் பாட்டிலை வெளியே எடுக்கிறார்.
அப்போது, இதை குடித்தால் வாசம் வருமோ.. என அவர்களுக்குள் பேசிக்கொண்டே மூடியை திறந்து குடிக்கத் தொடங்குகின்றனர். மாணவ, மாணவிகள் பத்துக்கும் மேற்பட்டோர் போட்டிப்போட்டு மதுவை குடிக்கத்தொடங்கினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம் சுழித்தனர்.
இதனை அப்பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், இவர்களின் இந்த வரம்பு மீறிய செயலை பேருந்தில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மேலும், மாணவர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் எனவும் மாணவ, மாணவிகளுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த கடை ஊழியர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.