மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தஞ்சை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளையராஜா (46). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். தஞ்சை அருகே ஏழுப்பட்டி பகுதியில் வேகமாக சென்ற போது திடீரென நாய் குறுக்கே புகுந்ததால் கட்டுப்பாட்டு இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து இளையராஜா மனைவி மணியம்மை தஞ்சை தமிழ்ப் பல்கலை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.