BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே வல்லத்தில் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே வல்லத்தில் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (30). இவரது மனைவி பிரியா (27). கிங்ஸ்லின் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளியில் கடன் வாங்கி மொய் செய்துள்ளார். இது குறித்து கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த பிரியா கடந்த 23-ம் தேதி தனது வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். உடன் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா இறந்தார்.

தகவலறிந்த வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரியாவின் தந்தை புதுக்குடியை சேர்ந்த குழந்தை ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )