BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மகன் உயிரிழப்பு- பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தந்தை.

11 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவன்… செங்கல்பட்டில்  அதிர்ச்சி | Bhoomitoday

சாலையை கடக்க முயன்ற 1ஆம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தில் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 5 வயது மகன் விஜின் இளவரசன், வானியங்குடியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினந்தோறும் பள்ளி வேனிலேயே பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி வேனில் இருந்து இறங்கி பின்புறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார். இதில் எதிரேவந்த அரசு பேருந்து மோதியதில் சிறுவன் விஜின் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில். அங்கு திரண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் வேனில் உதவியாளர்கள் இருந்தும் சிறுவனை தனியாக சாலையை கடக்க வைத்து விபத்தில் சிக்கி உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பெதகார் சிலை அருகே சாலையை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சிறுவனின் தந்தை உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பொதுமக்கள் தடுத்துள்ளனர்.

Maalaimalar cinema :Tamil news Worker who tried to commit suicide by  pouring petrol on his wife and setting her on fire near Panappakkam

இதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன் சிறுவனின் பெற்றோரிடம் ஆர்.டி.ஒ முத்துக்கழுவன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )