மாவட்ட செய்திகள்
பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தூய்மை பணி துவக்கம்.
பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தூய்மை பணி துவக்கம் – புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உறுப்பினர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதியதாக தலைவர் துணை தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து புதியாத தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தூய்மை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் புதியாத தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் பர்கூர் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.
பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் இன்று முதல் துவங்கி தொடர் நடவடிக்கையாக தூய்மைப் பணியை மேற்கொள்ள உள்ளனர் பர்கூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சித் தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்தல் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளித்தல் குப்பைகள் அகற்றல் போன்ற அடிப்படை தூய்மைப் பணியை துவக்கி வைத்தனர். இந்தப் தூய்மை பணியில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 65க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தூய்மை பணியில் பேரூராட்சி துணை தலைவர் லட்சுமி மனோகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.