BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆரம்பமே பிடிக்கவில்லை. தாயின் இரண்டாவது கணவரை கொலைசெய்த மகன்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (65). இவரது முதல் மனைவி மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தன்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கணவனை இழந்த தனலட்சுமி என்பவருடன் திருமணம் செய்யாமல் மனோகர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொடர்பு ஊர் முழுவதும் தெரியவர சித்தாள் தனலட்சுமி மனோகரை முறைபடி திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தனலட்சுமி என்பவருக்கு தினேஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். மனைவியை பிரிந்த மனோகரும் கணவனை இழந்த தனலட்சுமியும் திருமணம் செய்துகொண்டு கடம்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த மனோகர், தனலட்சுமியை தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பேசியதால், பொறுமையை இழந்த தனலட்சுமியின் மகன் மனோகரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் மனோகருக்கு தலையில் பலத்த காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை அனுப்பிவைத்தனர் அப்பகுதி மக்கள்.


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனோகர் இறந்துவிட்டார். இந்நிலையில் கட்டையால் தாக்கிய தினேஷ் கைது செய்து வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனலட்சுமி, மனோகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து தினேஷுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காமல் என்று கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த தினேஷ், தாயை திட்டியதால் மனோகரை கொலை செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )