மாவட்ட செய்திகள்
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கள தேவி கண்ணகி கோவிலில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று சித்திரை முழு நிலவு விழா.
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கள தேவி கண்ணகி கோவிலில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று சித்திரை முழு நிலவு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி கௌசல்யா தலைமையில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் மேகமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாப்பு அலுவலர; ரவிக்குமார், போக்குவரத்து, காவல்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி