மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10-லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் எரிந்து சாம்பல்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஆதிஅனு தென்னை நார் மஞ்சு தொழில்ச்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்போது வெப்பமான காற்று வீசியதால் தீ மளமளவென பல்வேறு பகுதிகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது உடனடியாக அங்கு பணியாற்றிய பணியாளர்கள் வெளியேரியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் எனினும் குடோனில் காயப்போட்டிருந்த சுமார் 10-லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் கயிறு திரிக்கும் எரிந்து சாம்பலாயின இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.