மாவட்ட செய்திகள்
கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்ற திலகர் திடல் காய்கறி சந்தைக்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மாநகர மேயரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது!!!
தஞ்சை மாநகர மேயர் சண். ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி அவர்களையும் இன்று 24~3~22 ஏஐடியூசி தொழிற்சங்க சார்பில் தஞ்சாவூர் திலகர் திடல் காய்கறி சந்தையில் மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது. மாநகர மேயர் மற்றும் துணை மேயர் ஒரு மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து காவிரி சிறப்பங்காடி வழியாக ஒருவழிப்பாதை பேருந்துகள் செல்வதற்காக அந்தப் பகுதியில் தெருவில் வியாபாரம் செய்த தெரு வியாபாரிகள் அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திவந்த தெரு வியாபாரிகள் காவல்துறையால் அடித்து விரட்டப்பட்ட போது ஏஐடியூசி தொழிற் சங்கத்தில் இணைந்து சங்கத்தின் மூலமாக தொடர் முயற்சி மேற்கொண்டு 2004ஆம் ஆண்டு நகராட்சி தலைவராக இருந்த திரு சுல்தான் அவர்கள் தற்போது காய்கறி சந்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடம் ஒரு மாநகராட்சிக்கு சொந்தமான பழைய இடிந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சமப்படுத்தி இந்த தெரு வியாபாரிகளுக்கு வாழ்வளித்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு 2015ஆம் ஆண்டில் கடைகள் கட்டப்பட்டு இந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.ஆனால் தற்போது மேற்கண்ட திலகர் திடல் காய்கறிச் சந்தையில் 44 கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் மூலமாக மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு அன்றாடம் சிறுசிறு வியாபாரம் செய்கின்ற இவர்களுக்கு பெரும் செலவாகிறது என்பதால் மேற்கண்ட கோரிக்கையுடன் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் திலகர் திடல் தெரு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அவர்களையும் துணை மேயர் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் மாவட்ட தலைவர் மற்றும் திலகர் திடல் மார்கெட் சங்கத் தலைவர் வெ. சேவையா மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ஜி.சி.ரவி,சுடலைமுத்து,ஜெயலெட்சுமி, பாபாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்