மாவட்ட செய்திகள்
நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை பூதலூர் ஒன்றியத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு கூட்டம் செங்கிப்பட்டியில் ஒன்றிய துணை செயலாளர் தோழர்.கே.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன்,மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் ஆர்.முகில்,நிர்வாகிகள் ஜி.தங்கமணி,ஐ.அமிர்தராஜ்,ஆர்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில்,இந்தியாவின் 10 மத்திய தொழிற்சங்கங்களும், வங்கி, காப்பீடு, பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் உள்ளிட்ட துறைவாரி பணியாளர் சங்கங்களும் இணைந்து, வரும் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளன.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்கத்தில் பூதலூர் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று, பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,தமிழக அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடி அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை களைந்து நகைக்கடன் பெற்று தள்ளுபடி பட்டியலில் விடுபட்டுள்ள ஏழை,எளிய மக்களையும் இணைத்து அக்கடணையும் தள்ளுபடி செய்திட வேண்டுமென தமிழக அரசை பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் வலியுறுத்தி தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,எதிர்வரும் ஏப்ரல் 12-ல் செங்கிப்பட்டியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய 4-வது மாநாட்டை சிறப்பாக நடத்துவது என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.