மாவட்ட செய்திகள்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது வழக்கு நிலுவையில் உள்ளபோதே கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அணையை கட்ட மும்முரம் காட்டி வருகிறது.
இதனை கண்டிக்கும் வகையில் இன்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஒன்று திரண்டு தர்மபுரி மாவட்டத்தில் ஒன்று கூடி கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட உறுதுணையாக உள்ள மத்திய அரசை கண்டித்தும் பென்னாகரம் அடுத்து மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகனப் பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாகவும் இதற்கு மத்திய அரசும் மறைமுக ஆதரவு தருகிறது கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி நடைபயணம் போராட்டம் நடத்துகிறது கர்நாடகத்தில் ஆளும் பாஜக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கைகோர்த்து தமிழகத்தின் வரும் தண்ணீரை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.
நஞ்சு இல்லாத குடிநீர் கிடைக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்பட்டு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்படும் வகையில் காவிரியிலிருந்து உபரி நீரை மோட்டார் பம்ப் மூலம் ஏரிகளுக்கு நிரப்பும் நீண்டநாள் விவசாயிகளின் கனவு தகர்க்கப்பட உள்ளதாகவும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை தேசிய ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் எனவே தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மீட்டெடுக்க கர்நாடக அரசின் தமிழர் விரோத நடவடிக்கை கைவிடவும் மத்திய அரசின் மேகதாதுவில் அணை கட்ட மறைமுக ஆதரவு நிலையை கைவிட மேகதாது அணை கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக விவசாயிகள் சங்கம் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.