மாவட்ட செய்திகள்
சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அடர்ந்த முள் செடிகள் புதர் மண்டி காணப்படுகிறது.
இன்று இந்த முட்புதர் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது செடிகளுக்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அவர்கள் கால்நடை மருத்துவர் மூலமாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து அப்பகுதிகள் தேடிப் பார்த்ததில் செடிகளுக்கு பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ஆளைக் கொல்லும் அளவிற்கு விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இது என தெரிவித்தனர். பின்னர் அதனை பிடித்து கன்னிவாடி அடர்ந்த மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்