மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் பெண் காவலர்களின் வசதிக்காக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.
தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் பெண் காவலர்களின் பயன்பாட்டிற்காக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது,
இக்கருவியின் செயல்பாட்டை தஞ்சாவூர் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பிருந்தா தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டை காவலர்களிடம் தெரிவித்தார், இதில் போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன்,ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , களப்பணியாளர் சிவரஞ்சனி மற்றும் போக்குவரத்து பெண் காவலர்கள் கலந்து கொண்டனர் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.