மாவட்ட செய்திகள்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு இதே கோரிக்கையை முன்வைத்து பானையை உடைத்து போராட்டம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கர்நாடக அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் மேகதாதுவில் அணை கட்ட முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த விவசாயிகள் கர்நாடக அரசு உடனடியாக ஒதுக்கிய நிதியை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இத் திட்டத்தை வாபஸ் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் காவிரியில் தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராமல் வறண்ட பாலைவனமாக கூடும் எனவே இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி நீர் என்ற எழுதிய பானையை உடைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.