BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலையில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் பீதி.

ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலையில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் பீதி பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதால் உள்ளது பொதுமக்கள் அச்சத்தால் சாலை ஓரங்களில் தஞ்சம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட கே கீரனூர் ஊராட்சியில் கீரனூர் பகுதியில் அதிகாலை 2 மணி முதல் கிராமப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக திடீர் திடீரென வெடிகுண்டு வெடிப்பது போன்ற சத்தம் வருவதாகவும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து ரோட்டோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர் மேலும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது அதனால் பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் அச்சத்துடன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அமர்ந்துள்ளனர் இந்த வெடி போன்ற சத்தம் தொடர்ந்து சில 6 நாட்களாக ஒவ்வொரு முறை கேட்பதாக தற்போது பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இன்று அதிகாலை 2 மணி முதல் ஏற்பட்ட சத்தம் மிக கடுமையாக இருந்ததாகவும் இதனால் பாத்திரங்கள் அசைந்து ஓடியதாகவும் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் இதனால் கீரனூர் கிராமப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதுபற்றி பழனி சார் ஆட்சியர் பொறுப்பு சிவகுமார் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி நேரில் வந்து விசாரணை நடத்திவிட்டு இது சம்பந்தமாக புல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அது பற்றி ஆராய புள்ளியில் துறையினர் வருவதாக தகவல் தெரிவித்துள்ளார் அவர்கள் வந்து இது பற்றி நேரடியாக ஆய்வு செய்த பின்பே இந்த சத்தத்திற்கும் இந்த விரிசல் ஏற்பட்ட தற்கான காரணம் தெரியவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )