மாவட்ட செய்திகள்
கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நடந்த சாலை விபத்தில் ரவுடி ரேப்பி சரவணன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரேப்பீ சரவணன் ( 35). கும்பகோணம் பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை மணஞ்சேரி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி சரவணன் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சரவணன் உயிரிழந்தான். இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
